Thirukkural - Parimelazhagar

Friday, November 29, 2013

Pan Ennam

ஓம்

பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். (573)

பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் - பண்  என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்!
கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் - அது போலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டம் இல்லாத இடத்து.

[பண், கண் என்பன சாதிப்பெயர். பண்களாவன: பாலையாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: யாழின்கண் வார்தல் முதலிய எட்டும்; பண்ணல் முதலிய எட்டும்; மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும்; பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையாதவழிப் பண்ணால் பயன் இல்லாதவாறு போலக் கண்ணோட்டத்து இயையாதவழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் "கண்ணகல் ஞாலம்" (திரிகடுகம் 1) என்புழிப் போலக் கொள்க.] 


அடுத்த ச்லோகத்தில் - அதாவது 'ஷட்பதீ'யன் மூன்றாவது ச்லோகத்தில் - ஒரு பெரிய தத்வத்தைச் சொல்கிறார் ஸ்ரீ ஆசார்யாள்.
ஸத்யபி பேதாபகமே
நாத தவாஹம் ந மாமகீநஸ்த்வம்
ஸாமுத்ரோ U தரங்க:
க்வசந ஸமுத்ரோ ந தாரங்க:
'பேத அபகமே' என்பது சேர்ந்து வரும்போது 'பேதாபகமே' என்றாகிறது. 'அபகமம்' என்றால் 'போய்விடுவது', 'நீங்குவது' என்று அர்த்தம். கமம், கமனம் என்றால் வருவது, சேர்வது. இதற்கு எதிர்ச் சொல் அபகமம். 'பேத அபகமே' என்றால் 'பேதம் நீங்கவிட்ட நிலையிலே' என்று அர்த்தம்.
என்ன பேதம்? இப்போது பரமாத்மா என்று ஒன்று இருக்கிறது, அதற்கு வேறாக ஜீவாத்மா என்று இன்னொன்று இருக்கிறது என்றுதானே நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்? இப்படி பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறு வேறு என்று, அதாவது அவை பேதமானவை என்று நினைத்துக்கொண்டிருப்பதால்தான் ஸம்ஸார நாடகமே நடக்கிறது. இரண்டும் வேறு இல்லை, ஒன்றுதான், கொஞ்சம்கூட பேதமே இல்லை என்று சொல்வதுதான் அத்வைதம். ஆசார்யாள் நிலைநாட்டின ஸித்தாந்தம் அதுதான். 'ஜீவ ப்ரஹ்ம அபேத யோகம்' என்றே அதைச் சொல்வார்கள்.
இந்த பேதம் போன நிலையைத்தான் 'பேதாபகே' என்றார், அதுதான் ஸத்யமான, எக்காலும் மாறாத ஆனந்தமான, மோக்ஷம் எனப்படுகிற நிலை. இதுதான் பரம ஸத்யம் என்றாலும்கூட,..
ஸத்யபி
'அபி ¢ எனறால் 'என்றாலும்கூட'. இப்படியரு clause போட்டுவிட்டால், இதற்கு மாறாக, வித்யாஸமாக இன்னோர் அபிப்ராயம் வரப்போகிறது என்று அர்த்தம். "பகவானே நீயும் நானும் வேறாக இருக்கிற பேதம் போய்விட்டாலுங்கூட" என்று ஆரம்பிக்கிறார்.
'அத்வைத ப்ரதிஷ்டாபன ஆசார்ய' என்றே ஸ்தோத்ரம் செய்யப்படுகிற பகவத்பாதாள் அபேத அத்வைதத்துக்குத் துளிக்கூட மாறாக, வித்யாஸமாக இன்னொன்றைச் சொல்லக் கூடாதே, இங்கே என்ன இப்படி 'இருந்தாலுங்கூட' என்று 'அபி' போடுகிறார் என்று பார்த்தால்:
இங்கே அவர் பக்தராகப் பேசுகிறார். ஞானியாக அத்வைதத்தைச் சொன்னார். ஞான மார்க்கத்தில் போகக் கூடியவர்களுக்கு எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படித் தமது பாஷ்யங்களிலும், மற்ற ஞான க்ரந்தங்களிலும் சொன்னார் தீர்மானமாக, 'ஜீவாத்மா பராமாத்மா என்று இரண்டில்லை. ப்ரஹ்மம் ஒன்றுதான் ஸத்யம். ஜீவனும் அந்த ப்ரஹ்மம்தான். இந்த லோகமெல்லாம் வெறும் மாயைதான்' என்று திரும்ப திரும்பச் சொன்னார்.
ஆனால் இப்படி அவர் சொன்னார் என்பதாலேயே, சொல்கிறவர், அதைக் கேட்க வேண்டியவர்கள் என்றெல்லாம் ஏதோ பேதமிருக்கிற மாதிரி இருக்கிறது. எல்லாம் ப்ரஹ்மம், லோகம், மாயை என்று விட்டால் யாருக்கு யார், என்னத்தை உபதேசிப்பது?
சங்கர பகவத் பாதர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. கார்யமில்லாமல் எல்லாம் தானாக அடங்கிப்போன நிலையில் அத்வைதம் ஸித்திக்கிறது, அங்கே ஜீவ ப்ரஹ்ம பேதமே இல்லை. 'பேத அபகமம்' ஏற்படுகிறது. ஆனால், அந்த ப்ரஹ்மத்மேதான் மாயா சக்தியால் தன்னை இத்தனை ஜீவ ஜந்துக்களைப் போலவும் ஜகத்தைப் போலவும் காட்டி, இந்தக் கார்ய ப்ரப்ஞசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கார்ய ப்ரபஞ்சமும் இறுதியான ஸத்மயம் இல்லை. அதற்கு ஆதாரம் கார்யமில்லாத ப்ரஹ்மம்தான். அந்த ப்ரஹ்மத்தோடு ஒன்றிவிடுவதுதான் நிரந்தர ஸத்யமான நிலை. எல்லாம் ஸரிதான். ஆனால் நிரந்தர ஸத்யமாக இல்லாவிட்டாலும், தாற்காலிகமாக இந்த லோகத்தை நாம் நிஜம் என்று நினைக்கிறவரையில் அதுவும் ரொம்ப நிஜம் மாதிரி தானே இருந்து கொண்டிருக்கிறது? பரம ஸத்யத்திலே கரைந்து ஒரு ஞானி நிர்வகில்ப ஸமாதியில் ப்ரஹ்மமாக இருந்தாலும் கூட, அந்த ப்ரஹ்மமே இந்தக் கார்ய ப்ரபஞ்சத்தை நடத்துவதற்காக எடுத்துக்கொண்டிருக்கிற ஈச்வர நிலையில் வந்த அந்த ஞானியினையும்?"அப்பா, உனக்கு ஸாரத்தில் எல்லாம் ஒன்றாகத் தெரிந்தாலும், வ்யவஹாரத்தில் வேறு வேறு மாதிரி இருப்பதையும் c கொஞ்சம் கவனிக்கிற மாதிரி கவனித்து இந்த லோகத்துக்கு நல்லது பண்ணு, இதற்கு உபதேசம் பண்ணு" என்று ஞானியையும், தன்னலமே இல்லாத பரோபகார கர்மாவில் தள்ளிக்கொண்டுதானே இருக்கிறது? இந்த நிலையில் இருந்து கொண்டுதானே அத்வைத ஸ்வரூபமான ஆசார்யாளும், உபதேசத்தைக் கேட்பதற்காகத் தமக்கு அந்யமாக இன்னொருத்தர் இருப்பது போலத் தோன்றும் வ்யவஹார தசையை ஒப்புக்கொண்ட மாதிரி நிறைய எழுதியும், பேசியும், வாதம் செய்தும், தேசமெல்லாம் சுற்றியும் உபதேசம் பண்ணினார். கார்யமில்லாத ப்ரஹ்மத்தோடு ஸாக்ஷ£த் ப்ரஹ்மமாகவே அத்வைதமாக இருக்கிறவர், கார்யம் என்று வந்தபோது, ஈச்வரன் என்ற மஹாசக்தியின் லவலேசம்தான் தாம் என்று அடங்கியிருந்து காட்டினார். கார்யமற்ற நிலையில் ஜவினைத் தானாகவே ஆக்கிக்கொள்கிறவன் கார்யலோகத்தில் தான் மட்டுமே ஸர்வ சக்தனாக இருந்துகொண்டு அந்த சக்தியில் துளித் துளிதான் ஜீவர்கள் மூலம் வெளிப்படுத்துகிறான். இப்படித்தான் ஆசார்யாள் அபிப்ராயப்பட்டிருக்கிறார்.
அதனால்தான் ப்ரஹ்மத்தோடு ப்ரஹ்மமாக இருந்தவரே, காரணம் என்று வருகிறபோது (உள்ளூர பகவத்பாதாளுக்கு தாம் கார்யமில்லாத வஸ்து என்ற அநுபவம் ஸதா இருந்து கொண்டிருந்தாலும் இப்படி ஒரு வேஷம் போட்டு நடக்கிற போது) ஈச்வரனிடம் ரொம்பவும் அடங்கி, பரம விநயமாக இருந்து காண்பித்தார். இந்த கோணத்திலிருந்து தான் 'ஷட்பதீ'யில் மூன்றாவது ச்லோகத்தைப் பண்ணியிருக்கிறார்.
ஜீவன் - ப்ரஹ்மம் என்ற பேதம் அடிபட்டுப்போன உயர்ந்த ஞான அநுபவ நிலையிலே, இருப்பதெல்லாம் ஒரே 'ஸத்' வஸ்துதான் என்றாலும் லோக தசையில் இருக்கிற வரை ஞானாநுபவம் வருகிறவரை, ஆள்கிறவனான மஹா சக்தனாக ஈச்வரன் என்று ஒருவனும், அவனுக்கு வேறுமாதிரி ஆளப்படுகிறவர்களான அல்ப சக்தர்களான அநேக ஜீவர்களும் தோன்றத்தான் செய்கிறார்கள். இதே ஸ்தியில் 'நானும் ஈச்வரனும் ஒன்று' என்று இந்த அல்ப சக்தன் அந்த ஸர்வ சக்தனோடு அபேதம் கொண்டாடிக்கொண்டால் தப்பு.
'அப்படியானால் அத்வைதம் தப்பா?' என்றால் அப்படியுமில்லை. இதென்ன குழப்பமாயிருக்கிறதே என்று பார்த்தால் ஆசார்யாள் ரொம்ப அழகாகத் தெளிவபடுத்தி பதில் சொல்கிறார். ஸமுத்ரமும் அலைகளும் ஒன்றா, வேறு வேறா? மேலே பார்த்தால் வேறேதான். உள்ளே போனால் ஒன்றுதான். உள்ளுக்குள்ளே அலையே இல்லை. அந்தமாதிரி உள்முகமாகப் போய்விட்டால் ஜீவாத்மாக்கள் என்ற பல அலைகளே இல்லாமல் ஒன்றேயான பரமாத்ம ஸாகர அடி மட்டம் மட்டும்தான் அத்வைதமாக இருக்கிறது. அந்த ஸமுத்ரமேதான் மேல் மட்டதத்தில் பல அலைகளாகத் தெரிகிறது. ஏக ஸமுத்ரத்தில் காற்றினால் அநேக அலைகள் உண்டாகிற மாதிரி, மாயையால் வெளிமுகப்படுகிறபோது, ஒரே பரமாத்மாவில் பற்பல ஜீவாத்மாக்கள் உண்டான மாதிரி இருக்கிறது.
இந்த ஸ்திதியில் ஒவ்வொரு அலையும், 'நானே பூர்ண ஸமுத்ரம்' என்று சொன்னால் தப்புதானே? அலைகளான தாங்கள் அனைவரும் ஒரே ஸமுத்ரத்தைச் சேர்ந்த அதன் சிறுசிறு அம்சங்கள் என்பதுதானே ஸரி?
அதுபோல, அத்வைதநாநுபூதியில் இருப்பது ஒன்றே என்றாலும் -ஸத்யபி பேதாபகமே - விவகார தசையில் ஜீவர்களான நாங்கள் எல்லோரும், எப்படி ஸமுத்ரமில்லாமல் அலைகள் இல்லையோ அப்படி உன்னையன்றி இருப்பு என்பதே யில்லாமல் முழுக்க முழுக்க உன்னைச் சேர்ந்தவர்களே"
நாத தவாஹம் ந மாமகீனஸ் -த்வம்
நாத - எங்களை ஆள்கிற ப்ரபுவே!
தவாஹம் - தவ, அஹம், அஹம் - நான், தவ - உன்னுடையவன். நான் உன் உடைமை.
'ந மாமகீந: த்வம்' என்றால் த்வம் - c, மாமகீந: - என்னுடையவன், ந- அல்ல. c என்னுடைமை அல்ல.
ப்ரபுவே! நான் உன் உடைமை. c உடைமையாளன். c என்னைச் சார்ந்து, என் உடைமையாக இருப்பவனில்லை. அலையில்லாமல் சாந்தமாக ஸமுத்ரம் இருக்கலாம். உள்ளே எப்போதும் அது அப்படியிருப்பதுதான். அதுபோல் ஜீவர்களும் ப்ரப்ஞ்சமும் இல்லாமல் c இருக்கலாம். ஆனால் ஸமுத்ரமில்லாமல் அலை இருக்கமுடியாது. அது போல், c இல்லாமல் நான் இல்லவே இல்லை.
ஸமாதி நிலையில் நான் c பேதமில்லாத ஏகத்தை நான் அநுபவிக்கிறேன் என்பதால் வ்யவஹார தசையில் நம்மை இரண்டாகப் பார்க்கிறபோது, நீதான் என் உடைமை, நீதான் என்னைச் சார்ந்திருப்பவன் என்று நினைத்தால் அது எப்பேர்ப்பட்ட அஸம்பாவிதம் தெரியுமா? ஸமுத்ரம்தான் அலையைச் சேர்ந்தது, அலை ஸமுத்ரத்தைச் சேர்ந்ததில்லை என்று நினைக்கிற மாதிரிதான்.
ஸாமுத்ரோ U தரங்க: க்வசந ஸமுத்ரோ ந தாரங்க:
தரங்கம் என்றால் அலை. (ஜலதரங்கம் என்கிறோம்.) அலைதான் ஸமுத்ரத்தின் உடைமை. ஸமுத்ரம் அலையின் உடைமை இல்லை - ஒருகாலும் இல்லை. 'க்வசந' - ஒருகாலும். தப்பித் தவறிக்கூட, பரமாத்மா ஜீவாத்மாவைச் சார்ந்திருப்பதாக நினைத்துவிடப்படாது என்பதற்காக, ஒருகாலும் இப்படியில்லை" என்று அழுத்தமாக "க்வசந" போட்டுக்காட்டியிருக்கிறார். அத்வைதத்தை வ்யவஹார உலகத்திலே தப்பாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்ற அக்கறையால், கவலையால் இப்படி அழுத்திச் சொல்லியிருக்கிறார். "எல்லாம் உன் உடைமையே" என்று தாயுமானவர் பாடினார். உடைமைக்கு "ஸ்வம்" என்று பெயர். எல்லாவற்றுக்கும் - ஸ்வம் அனைத்துக்கும் - உடைமையாளன்தான் "ஸ்வாமி." அதனால்தான் "உடையவர்" என்று வைஷ்ணவர்கள் சொல்கிறார்கள். மற்றவர்கள் கூட முன்காலத்தில் கபாலீச்வர ஸ்வாமி. நாகேச்வர ஸ்வாமி என்பது போன்ற பெயர்களை "கபாலீச்சுரமுடையார்", "திருநாகேச்சுரமுடையார்" என்பதுபோல 'உடையார்' சப்தத்தால்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
முடிவான அநுபவம் என்று வருகிறபோது, அசார்யாள் சைவ வைஷ்ணவ ஸித்தாந்தங்களுக்கு மாறாத ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றே என்று ஸித்தாந்தம் செய்தபோதிலும், யதார்த்த நிலையை, வ்யவஹார தசையைக் கருத்தில் கொண்டு, இந்த ச்லோகத்தைப் பண்ணும்போது, நடைமுறை வாழ்க்கையில், தானே ஈச்ரவன் என்று தப்பாக எவனும் நினைத்துவிடாமல், அவனது லவலேச அம்சமேதான் என்று அடங்கிப் பணிந்து இருக்கவேண்டும் என்று உபதேசிக்கிறார். சைவ - வைஷ்ணவ பக்திமான்களுக்குக் கொஞ்சமும் பின்வாங்காமல் அவர்களைப் போலவே நைச்யமாக, எளிமையாக பகவானை ப்ரார்த்தனை பண்ணுகிறார். "ஷட்பதீ" ஆரம்பத்தில் அவர் வேண்டிய விநயத்துக்கு அவரே விக்ரஹமாக இருந்தகொண்டு ப்ரார்த்தனை பண்ணுகிறார்.
ஆசார்யாள் எப்படிக் கொள்கைப் பிடிவாதமேயில்லாமலிருந்தார் என்று இங்கே தெரிகிறது. அவரது ஸித்தாந்தம், லக்ஷ்யம் என்னவென்றால் அத்வைதம். ஆனால் அந்த ஸித்தியின் அந்தத்துக்கு, லக்ஷ்ய நிலைக்கு போகாமல், ஈச்ரவன் - ஜீவன் என்று த்வைதமாக இருக்கும் போது, ஜீவனைப் பார்த்து, 'அடா, அப்பா! அத்வைதத்தை இங்கே கொண்டுவந்துவிடாதே!" என்று அவரே தடுக்கிறார். த்வைதிகளைவிட ஸ்ட்ராங்காக அத்வைதத்தை அந்தண்டை கொண்டுபோகச் சொல்கிறார்!
பரமாத்மாவாகவே இருப்பதிலே ஒரு ஆனந்தமென்றால், அவனை பக்தி பண்ணிக்கொண்டிருப்பதிலும் ஒரு ஆனந்தம் இருக்கிறது. பக்தி பண்ணும்போது, 'அவனே நாதன், நம்மை உடைமையாகக் கொண்டவன், அவனிடம் துரும்பாகப் பணிந்து கிடக்க வேண்டியவர்களே நாம்' என்று புரிந்துகொண்டால்தான் அந்த ஆனந்தம் கிடைக்கும். ஆகையினால்தான் ராமாநுஜருக்கும் மத்வருக்கும் கொஞ்சங் கூடப் பின்னே தங்காமல் அத்வைத பரமாசார்யாளும், "c மஹா ஸமுத்ரமென்றால் நான்அதிலே ஒரு சின்ன அலைதான். நீயன்றி நானில்லை. நான் உன் ஸொத்துதான்" என்று ஒரே பணிவாகச் சொல்கிறார்.